ஸ்டேஷன் மாஸ்டர் செய்த தவறு.. நொடியில் பிரியவிருந்த பல உயிர்கள் - கண் முன் வந்துபோன ஒடிசா கோரம்

x

ங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் காசர்கோட்டிலுள்ள காஞ்சங்காடு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது நடைமேடை 1க்கு செல்ல வேண்டிய ரயில் மாறுதலாக நடைமேடை இல்லாத பகுதியில் நின்றது. பயணிகள் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டனர். இது சரக்கு ரயில்கள் செல்லும் பாதை. அந்த சமயத்தில் வேறு ரயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து அந்த ரயில் 8 நிமிடங்கள் தாமதமாகக் கிளம்பியது. முதற்கட்ட விசாரணையில் காஞ்சங்காடு ஸ்டேஷன் மாஸ்டர் செய்த தவறு தான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது. அவர் நடைமேடை இல்லாத ரயில் பாதைக்கு சிக்னல் கொடுத்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்