மஸ்க் வாங்கிய மரண அடி-நொடியில் சரிந்த ரூ.6000 கோடிகால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி

x
  • உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் தொடரும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு தற்போது 19,500 கோடி டாலராக சரிந்துள்ளது.
  • 2023 ஜூலை 19ல் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
  • 25,500 கோடி டாலராக இருந்த நிலையில்,
  • கடந்த 100 நாட்களில் 6,000 கோடி டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
  • மின்சார கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில், எலான் மஸ்க் வசம் 13 சதவீத பங்குகள் உள்ளன.
  • அக்டோபர் 18ல், டெஸ்லா நிறுவனத்தின் காலாண்டு
  • வருவாய் பற்றிய விவரங்கள் வெளியானது.
  • மூன்றாம் காலாண்டு லாப விகிதம், 2022ல் 17.2
  • சதவீதமாக இருந்து, 2023ல் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
  • இதனால் டெஸ்லா பங்கு விலை அக்டோபர் 17ல் 254
  • டாலராக இருந்து தற்போது 200 டாலராக, 27 சதவீதம் சரிந்துள்ளது
  • இதனால் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 4,100 கோடி டாலர் அளவுக்கு குறைந்துள்ளது
  • அதே சமயத்தில், எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டரின் நிகர மதிப்பு 2022 அக்டோபரில் 4,400 கோடி டாலராக இருந்து, தற்போது
  • 1,900 கோடி டாலராக சரிந்துள்ளது.
  • 2022 அக்டோபரில் 4400 கோடி டாலருக்கு, ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதன் நஷ்டத்தை சரி செய்ய, ஆட்குறைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அவை எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. மேலும்
  • விளம்பர வருவாயும் 50 சதவீதம் சரிந்துள்ளதால் எக்ஸ்
  • தளம் கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்