ரூ.4 கோடி தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி வைத்த நபர் - ஏர்போர்ட்டில் அதிர்ச்சி

x

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில், ஒரே நாளில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மஸ்கட்டில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த அப்துல் ஹமீது என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து பேஸ்ட் வடிவில் மூன்று கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. மேலும், பஹ்ரைனில் இருந்து வந்த ஒருவர், தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி, அதை அலுமினிய ஃபாயிலில் சுற்றி, குப்பை கூடையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்