"பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயர் பாரத்..." பிரதமருக்கு பறந்த பரபரப்பு கடிதம் | Modi

x

பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டாம் என கேரள அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று குறிப்பிட வேண்டுமென, என்.சி.இ.ஆர்டி குழு அளித்த பரிந்துரையை ஏற்க வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளார். தலைமுறை தலைமுறையாக, மாணவர்கள் 'இந்தியா' என்ற பெயருடன் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் செழுமையான கடந்த காலத்தைப் படித்து வருவதாகவும், இப்போது அதை மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்