சல்யூட் அடித்த படியே சரிந்து விழுந்த அமைச்சர்... பதறிய அதிகாரிகள் - பரபரப்பு காட்சி

x

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சர் பிரபுராம் சவுத்ரி திடீரென மயங்கி விழுந்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ரைசென் நகரில், சுதந்திர தின விழா நடைபெற்றது.

இதில், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி கலந்துகொண்டு கொடியேற்றினார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையின்போது, மேடையிலேயே அவர் மயங்கி கீழே விழுந்தார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அமைச்சருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி, சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்