சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள்.."பயப்படாதீங்க நாங்க இருக்கோம்" தைரியம் கொடுத்த முதல்வர்

x

சில்க்யாராவில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களில் கப்பர் சிங் நேகி மற்றும் சபா அகமது ஆகியோரிடம், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நலம் விசாரித்தார். அப்போது, சுரங்கப்பாதையில் உள்ள அனைவரும் நலமுடன் இருப்பதாக இரண்டு தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். அவர்கிளடம், அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகள், துரித கதியில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், தொழிலாளர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து தகவல் கேட்டு வருவதாகவும், மீட்பு பணிகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை ஊட்டினார். இதனிடையே, சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்கள் வெளியே வரும் அளவிற்கு, குழாய்கள் போடப்பட்டிருக்கிறது. அந்தக் குழாய்கள் காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்