சபரிமலைக்கு சென்ற பேருந்து...கல் வீசி அடித்து நொறுக்கிய நபர்கள்.. வலைவீசி தேடும் போலீஸ்..

x

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே, சபரிமலைக்கு சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் இருந்து பக்தர்கள் 30 பேர் சபரிமலைக்கு பேருந்தில் சென்றனர். பத்தனம்திட்டா அருகே அத்திகயம் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், பேருந்தின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெருநாடு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்