தாயை பிரிந்த குட்டிக்கு - தவமாக கிடைத்த பாகன்கள் - பாசத்தில் கொஞ்சி நெகிழும் காட்சிகள் -

x

ஈரோடு பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண் யானையின் இரண்டே மாதக் குட்டி வனத்துறையால் மீட்கப்பட்டு மார்ச் 9ம் தேதி முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு பராமரிப்பிற்காகக் கொண்டு வரப்பட்டது. அதேபோல் கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் தாயைப் பிரிந்த ஆண் குட்டி யானை ஏப்ரல் 10 அன்று முதுமலை அழைத்து வரப்பட்டது... தொடர்ந்து அவை இரண்டும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கரால் கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. 2 பாகன்கள் உள்பட 5 பேர் அங்கேயே தங்கி குழந்தைகளைப் போல் குட்டி யானையைக் கவனித்து வருகின்றன. தினந்தோறும் இந்த குட்டி யானைகளுக்கு லாக்டோஜென், குளுக்கோஸ் கலந்த திரவ உணவு, தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு யானைக்குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நிலையில், காலை எழுந்ததும் 5 பேர் பாதுகாப்புடன் அவை மகிழ்ச்சியாக நடைபயிற்சி செல்கின்றன... குழந்தைத் தனமாக விளையாடியபடியே அவை நடைபயிற்சி செல்வது பார்க்கவே மன மகிழ்ச்சியைத் தருகிறது... மதிய உணவுக்குப் பின் மரத்தினடியில் குட்டித் தூக்கம் போடும் குட்டி யானைகளுக்கு கோடை வெயிலை சமாளிக்க இளநீரும் கொடுக்கப்படுகிறது... அப்படியே மாலையிலும் ஒரு சுற்று நடைபயிற்சி செல்லும் யானைக்குட்டிகள், பாகன்களையே தாயாக நினைத்து அருகில் படுத்துறங்கி நிம்மதி அடைகின்றன... இருந்தபோதும் தாய்ப்பால் இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்