இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.. தேர்தல் தேதி அறிவிப்பு

x

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் ஷரன் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நிறுவப்பட்ட தற்காலிகக் குழு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகித்து வருகிறது. இதையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக ஜூலை மாதம் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தலை நிறுத்தி வைக்க பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து. இந்நிலையில், இந்த தடையை உச்சநீதிமன்றம் அண்மையில் நீக்கியதைத் தொடர்ந்து, டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்