ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 4 வீரர்கள் துடிதுடித்து பலி...அதிகரிக்கும் பதற்றம்..
ஜம்முவில் ரஜோரி செக்டார் பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ரஜோரி செக்டார் அருகே உள்ள தனமண்டி பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்றுள்ளன. அப்போது ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜம்முவில் ஒரு மாதத்திற்குள் ராணுவத்தினர் மீது 2வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
Next Story
