காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதி.. குறி பார்த்து அடித்த பாதுகாப்பு படை

x

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஷோபியன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி கொல்லப்பட்டதுடன், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட தீவிரவாதி, தடை செய்யப்பட்ட ரெசிஸ்டன்ட் ப்ரண்ட் இயக்கத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்