தீவிரவாதம் - ஒரே புள்ளியில் இந்தியா-தான்சானியா

x

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவும் தான்சானியாவும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தான்சானியா அதிபர் சாமியா ஹாசனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வருகை தந்த தான்சானியா அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார்.

இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இந்தியாவும் தான்சானியாவும் முக்கிய கூட்டாளி என குறிப்பிட்டார். தீவிரவாதம் என்பது மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்பதில் இந்தியாவும் தான்சானியாவும் ஒருமித்த கருத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பில் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்க இருவரும் முடிவு செய்து இருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்