ரூ.2.5 கோடி டெபாசிட் செய்த தாசில்தார்.. அதிரடியாக ரெய்டில் இறங்கிய விஜிலென்ஸ்- மரிகுடாவில் பரபரப்பு

x

தெலுங்கானாவில் தாசில்தார் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

இரண்டு கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் வங்கி டெபாசிட் மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மரிகுடா தாசில்தார் மகேந்தர் ரெட்டி வீடு மற்றும் அவருக்கு நெருங்கிய உறவினர்களின் வீடுகள் ஆகியவற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டுகள் ஏற்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை 6 மணிக்கு துவங்கி மாலை வரை தாசில்தார் மகேந்திர ரெட்டி மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகள் ஆகியவற்றில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது மகேந்திர ரெட்டி வீட்டில் இருந்து இரண்டு கோடி ரூபாய் ரொக்க பண மற்றும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள மதிப்புள்ள சொத்து மற்றும் வங்கி டெபாசிட் பத்திரங்கள், ஏராளமான அளவில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், வெள்ளி பாத்திரங்கள் ஆகிவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இரண்டு கோடி ரூபாய் பணத்தை ஒரு இரும்பு லாக்கரில் தாசில்தார் மகேந்திர ரெட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்த நிலையில் அந்த லாக்கரின் சாவி இல்லை என்று அதிகாரிகளிடம் அவர் கூறிவிட்டதாக தெரியவந்துள்ளது.

எனவே கேஸ் மூலம் செயல்படும் கட்டிங் மெஷினை கொண்டு வந்து இரும்பு லாக்கரை வெட்டி அதில் பதிக்க வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்