திடீரென கேட்ட 'சர சர' சத்தம்... கோழி கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பு

x

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, மூன்று கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. கல்லடிக்கோடு பகுதியை சேர்ந்த அனி என்பவர், கூண்டு வைத்து கோழிகள் வளர்த்து வரும் நிலையில், மூன்று கோழிகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், கோழிகளுக்கு உணவு வைப்பதற்காக கூண்டை திறந்த போது, மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்