"விவசாயிகளுக்கு மானியம்" - அமைச்சரவை ஒப்புதல்

x

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது, விவசாயிகுக்கு எதிர் வரும் ரபி பருவத்துக்கு பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் உள்ளிட்ட உரங்களுக்கு மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறினார். அதன்படி, ஒரு கிலோ நைட்ரஜன் உரத்துக்கு 47 ரூபாயும், பாஸ்பரம் உரத்துக்கு 20 ரூபாய் 82 காசுகளும், பொட்டாசியம் உரத்துக்கு 2 ரூபாய் 38 காசுகளும், சல்பருக்கு 1 ரூபாய் 89 காசுகளும் மானியம் கிடைக்கும் என்றுஅவர் கூறினார். இந்த உர மானியம் வழங்க, மத்திய அரசுக்கு 22 ஆயிரத்து 303 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்த மானியம், உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்