சிக்கி சின்னாபின்னமான இலங்கை..எடுத்த அதிரடி முடிவு..!50லட்சம் பேருக்கு வைத்த டார்கெட் | Srilanka

x

நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகிய நிலையில், அதிலிருந்து மீண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதுவும் தனது எழில் மிகு இயற்கை அழகால் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் தீவு தேசமான இலங்கை... சுற்றுலாத்துறையின் வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளது.

அப்படி இலங்கைக்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க...

அந்நாடு, இனி தங்கள் நாட்டுக்கு வருகை தர விசா தேவையில்லை என ஏழு நாடுகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்திருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், இத்தகையை அறிவிப்பு வெளியாகி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா மட்டுமல்ல சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளில் இருந்தும் இனி இலங்கை செல்ல விசா தேவை இல்லை என அறிவித்துள்ளது, இலங்கை அரசு.

இந்த திட்டத்தை வரும் மார்ச் 31ஆம் தேதி சோதனை முயற்சியாக அமல்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியர்களே அதிக அளவில் சுற்றுலா செல்பவர்களாக இருப்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

செப்டம்பர் மாத புள்ளி விவரங்களின்படி, இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சீனாவில் இருந்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.

தற்போது விசா தேவை இல்லை என அறிவித்திருப்பதன் மூலம்... வரும் ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறது, இலங்கை.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல விசா கட்டாயம் என்ற நிலையில், தற்போது இலங்கை அரசின் இந்த அறிவிப்பால் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி நேர விரயமும் குறையும் என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த செய்தி மகிழ்வித்துள்ளது.

அதோடு தங்கள் நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை சென்று ரசிக்கும் வண்ணம் விரைவில் இ- டிக்கெட் வசதியையும்


Next Story

மேலும் செய்திகள்