"மன அழுத்தம்..." - ஆளுநர் சுவாரசிய பேச்சு

x

புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் அதற்கான பாடங்கள் உள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

உலக மனநல நாளை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில் மனநல ஆரோக்கியம் சார்ந்த ஆளுமைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ள ஆளுநரின் "எண்ணித் துணிக" நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான மன நோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர். விழாவில் மூத்த மனநல பேராசிரியர் லட்சுமி எழுதிய சொல்லப்படாத இந்திய மனோதத்துவ ரகசியம் என்கிற புத்தகத்தை வெளியிட்டார். மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, மன நல பாதித்த குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்வது அவசியம் என கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான பல வழி வகைகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்