"நீங்க ரெண்டு பேரும் பைக்ல போக கூடாது"தடுத்து நிறுத்திய கும்பல்..கர்நாடகாவை 2 துண்டாக்கிய சம்பவம்

x

கர்நாடக மாநிலம் மங்களூரு பாண்டேஷ்வர் பகுதியில் உள்ள கடையில் பணிபுரியும் நூருல்லா அமீன், சௌஜன்யா ஆகியோர் வேலை முடிந்தபின் ஒரே பைக்கில் சென்றனர். மிலாகிரஸ் சர்ச் - பாகினி சமாஜ் நோக்கி சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து சென்று தடுத்த பஜ்ரங் தள அமைப்பினர், இருவரிடமும் மதம் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில், ஒரே கடையில் பணிபுரிந்ததால் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றதாகவும், அப்போது சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்ததாகவும்

கூறியதை பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்