ஆளுநர் ரவியின் செயலாளர் மத்திய கல்வித்துறைக்கு மாற்றம்

x

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிய இணைச் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர் தகுதியிலான நியமனங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் மத்திய அரசின் கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆளுநர் ரவியின் செயலாளர் ஆவார். பதவியேற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்