கார் சீட்டில் ரகசிய அறை.. பைக் பெட்ரோல் டேங்கில் பதுக்கல் - கை காட்டும் இடமெல்லாம்.. - தலை சுற்றி நின்ற பீஹார் போலீஸ்

x

பீகாரில் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து நூதன வழிகளில் கடத்தல்காரர்கள் மதுபானங்களை கடத்தி வருகிறார்கள்.

பிகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மதுபான பாட்டில்களை மறைத்து கடத்தி வருகிறார்கள். காரில் இருக்கைக்கு பின்புறத்தில் உள்ள ரகசிய அறையிலும், இருசக்கர வாகனங்களில் இருக்கைக்கு அடியிலும், பெட்ரோல் டேங்கிலும் மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசம்- பீகார் எல்லையில் அமைந்துள்ள மாஞ்சி சோதனைச் சாவடியில், கலால் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உத்தரப்பிரதேசத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்