எம்எல்ஏ-க்களுக்கு சம்பள உயர்வு..முதல்வர் அதிரடி அறிவிப்பு | MLA | India

x

மேற்கு வங்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கான மாத அடிப்படை சம்பளத்தை கூடுலாக 40 ஆயிரம் ரூபாய் உயர்த்தி முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க எம்.எல்.ஏ.க்கள் பணப்பலன்கள் உடன் 81 ஆயிரம் மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் தற்போது அடிப்படை சம்பளம் ரூ.1.21 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் அமைச்சர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக முதல்வர் மம்தா பானர்ஜி உயர்த்தியுள்ளார். முதல்வரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வெகுகாலமாக மம்தா பானர்ஜி முதல்வருக்கான ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்