"ஏழைகளுக்கு மாதா மாதம் ரூ.5000 அடிப்படை ஊதியம்"...மல்லிகார்ஜூன கார்கே கொடுத்த வாக்குறுதி

x

ஆந்திராவில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனந்தபூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தகுதி வாய்ந்த ஏழை குடும்பங்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை, மாதிரி காசோலை மூலம் வெளியிட்டார். 'இந்திராம்மா அடிப்படை ஊதிய ஆதரவு' என்ற பெயரில், ஏழை குடும்பத்தில் உள்ள பெண்ணின் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றார். மோடியின் வாக்குறுதி போன்று இல்லை... இது காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதி என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்