ராஜ்ய சபா எம்.பி.யானார் ரிஷி சுனக் மாமியார்..!

x

நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். இவர்கள், கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். அந்த வகையில், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட சுதா மூர்த்தியை, நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். சுதா மூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநிலங்களவையில் அவரது இருப்பு பெண்களின் சக்திக்கு சிறந்த சான்று என குறிப்பிட்டுள்ளார். சுதா மூர்த்திக்கு, 2006ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2023ம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அவரது நிகர சொத்து மதிப்பு 755 கோடி ரூபாய் என்றும், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. சுதா மூர்த்தியின் கணவர் நாராயண மூர்த்தியின் நிகர மதிப்பு 36 ஆயிரத்து 690 கோடி ரூபாய் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த தம்பதிக்கு அக்‌ஷதா மூர்த்தி, ரோஹன் மூர்த்தி என 2 பிள்ளைகள் உள்ளனர். அக்‌ஷதா மூர்த்தியின் கணவர், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆவார்.


Next Story

மேலும் செய்திகள்