வாகனத்தில் வலம் வந்த ராகுல் காந்தி.. பாசத்தில் சுற்றி வளைத்த தொண்டர்கள்.. | Rahul Gandhi

x

ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தன்பாத் சராய்தெல்லா பகுதிக்கு வாகனத்தில் ராகுல் காந்தி வந்தபோது, சாலையின் இருபுறமும் திரண்டு பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் மலர்தூவி வரவேற்றனர். அவர்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏராளமானோர் ஆர்வத்துடன் செல்போனில் படம்பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்