விவசாயிகளை கண்டதும் திடீரென வண்டியை நிறுத்திய ராகுல் காந்தி. அடுத்து நடந்த சுவாரஸ்யம்

x

டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாலை மார்க்கமாக நீலகிரி வந்துள்ளார். வரும் வழியில் அரவேணு பகுதியில் தேயிலை விவசாயிகளை பார்த்த அவர் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். அங்கிருந்த பசுந்தேயிலை விவசாய பெண்களை சந்தித்த ராகுல் காந்தி, ஒரு மகன் தாயை அரவணைப்பதைப் போல், பாசத்துடன் அரவணைத்து குறைகளைக் கேட்டறிந்தார். மகிழ்ச்சியில் விவசாய பெண்கள் ராகுலை பாராட்டி முழக்கமிட்டனர். பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில், உரிய விலை கிடைக்கச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்வதாக, ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்