மல்லிகார்ஜூன கார்கே கேட்ட கேள்வி... கொந்தளித்த பாஜக.. அதிர்ந்த மக்களவை.. திக்கி தடுமாறியா அமித்ஷா

x

மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதன்முதலில் நிறைவேற்றியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எனக் குறிப்பிட்டார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டார்.ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றி ஆதிரஞ்சன் சவுத்ரி கூறியது தவறு என்றார். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் மக்களவை கலைக்கப்பட்டதால் இந்த மசோதா காலாவதியாகி விட்டதாக தெரிவித்தார். எனவே மகளின் இட ஒதுக்கீடு தொடர்பான என்ன மசோதாவும் தற்போது நிலுவையில் இல்லை என உள்துறை அமைச்சர் பதிலளித்தார்


Next Story

மேலும் செய்திகள்