வெடிகுண்டு வழக்கில் சிக்கிய கைதிகள்.. நீதிமன்றத்திலும் செய்த காரியம்... - குவிந்த போலீசார்..

x

கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்லம் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசியது தொடர்பான வழக்கின் விசாரணை கொல்லம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர், ஆந்திர மாநிலம் கடப்பா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். வேறொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரும், நீதிபதியை சந்திக்க வேண்டும் என, பாதுகாப்புக்கு வந்த ஆந்திர போலீசாரிடம் கூறினர். ஆனால் போலீசார் மறுத்ததால், ஆத்திரமடைந்த கைதிகள், திடீரென கை விலங்குகளால் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும், காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, கைதிகளை அழைத்துச் சென்றனர். நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்