"இதெல்லாம் உங்கட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம்.. நல்லா பாருங்க" - பிரதமர் போட்ட ட்வீட்

x

ஒடிசா மாநிலத்தில், பால்தியோ சாகு மதுபான தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர், கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். மதுபான தயாரிப்பு நிறுவன ஆலை, அலுவலகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அலமாரிகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட பணத்தைக் கண்டு மலைத்துபோன வருமான வரி அதிகாரிகள், பணத்தை எண்ண முடியாமல் திணறினர். பின்னர் 36 பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு பணம் எண்ணப்பட்டது. மதுபான நிறுவனத்துடன் ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதாதள அரசியல்வாதிகளுக்கும், ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வருமான வரி சோதனை தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். குவிந்துகிடக்கும் இந்தப் பணத்தை நாட்டு மக்கள் பார்த்துவிட்டு, பின்னர் நேர்மை குறித்து அந்த தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்