"என்னது முஸ்லீம பிரிச்சி பேசுனேனா? எப்போ? எங்க?'' - ஷாக்காகி கேட்கும் மோடி

x

இந்து - முஸ்லிம் இஸ்லாமியர் பிரிவினையை ஏற்படுத்தினால், நான் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை எடுத்து அதிக பிள்ளை பெற்றவர்களுக்கு கொடுத்துவிடும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அதில், தான் இஸ்லாமியர்களை குறிப்பிட்டதாக கூறப்பட்டது அதிர்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். இந்து குடும்பங்களில் கூட அதிக குழந்தைகளை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களால் குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுக்க முடியவில்லை என்றார். தனது பேச்சில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை என குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, உங்களால் பார்த்துக் கொள்ள முடியும் அளவிற்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றே கூறி​னேன் என்றார்.

சிறு வயதிலிருந்து இஸ்லாமிய குடும்பத்தோடு வாழ்ந்து வந்திருப்பதாக கூறியிருக்கும் பிரதமர் மோடி, 2002 ஆம் ஆண்டு முதல் தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்து முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, அப்படி பிரிவினையை ஏற்படுத்தினால், நான் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவன் எனவும் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்