"கேரள அரசின் கஜானா காலி" - போட்டுடைத்த முதல்வர் பினராயி விஜயன் | Pinarayi Vijayan

x

கேரளா மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்யப்படாததால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக அமைச்சர்கள் புகார் எழுப்பினர். நிதி நெருக்கடி நிலவுவதாகவும், பணத்தை கவனமாக செலவழிக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஓணம் சீசனையொட்டி, அரசின் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. செலவுகள் அதிகரித்தாலும், வருவாய் குறைந்தளவு உள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தாததால், நெருக்கடி மேலும் மோசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓணம் முடிந்ததும் கஜானா காலியாகிவிடும் என்கிறார்கள் அமைச்சர்கள். மத்திய அரசின் புறக்கணிப்பை மக்களுக்கு தெரிவிக்க ஊடகங்கள் தலையிட வேண்டும் என்றும் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் மீண்டும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்