லடாக் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு

x

லடாக்கின் கியாரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 ஒன்பது ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விபத்து ஒரு மோசமான சம்பவம் என ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சய் குல்கர்னி கூறியுள்ளார். போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, 12 மடங்கு உயிரிழப்பு இதுபோன்ற வாகன விபத்துகளால் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்