முன்விரோதத்தால் ஆசிட் வீசிய நபர்..தேடப்பட்ட நபர் போலீசுக்கு பயந்து தற்கொலை

x

திருவனந்தபுரம் மாறநல்லூர் பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சுதீர்கான் என்பவர் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது சஜிகுமார் என்பவர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த சுதீர்கானுக்கு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்துள்ளார். சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சஜிகுமார், சுதீர்கான் மீது ஆசிட் வீசியிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே தலைமறைவான சஜிகுமார் மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தார். முதற்கட்ட விசாரணையில் போலீசுக்கு பயந்து சஜிகுமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்