எம்பி பதவி நீக்கம்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு

x

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பதவிநீக்க விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது, மஹுவா மொய்த்ரா விதிகளை மீறிவிட்டதாக பாஜக எம்.பி. ஹீனா காவிட் குற்றம் சாட்டினார். உலகம் முழுவதும் இந்திய எம்.பி.க்கள் புகழை மஹுவா அழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசுகையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஹிராநந்தானியிடம் விசாரிக்கப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. வாதிட்ட நிலையில், மஹுவா பாஸ்வேர்டை பகிரவில்லை என ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. பேசினார். காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசிய போது, நெறிமுறைக் குழுவுக்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை என எதிர்ப்பை பதிவு செய்தார். விவாதத்தின் போது மஹுவா மொய்த்ராவுக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை. இறுதிய்ல் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் சோனியா காந்தி, மஹுவா மொய்த்ரா உள்பட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்