"பி 20 உச்சி மாநாடு இந்தியா 2023" பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை | Modi | G 20 Summit

x

டெல்லியில், இன்று (27.08.2023) நடைபெறும் பி 20 உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிசினஸ் 20, நிறுவனங்கள், வணிக அமைப்புகளை பங்கேற்பாளர்களாக கொண்ட ஜி 20இன் மிக முக்கிய ஈடுபாடு குழுக்களில் ஒன்றாகும். அதன்படி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை தூண்டுவதற்கு உறுதியான செயல்பாட்டு கொள்கை பரிந்துரைகளை வழங்க பி 20 செயல்படுகிறது. பி 20 உச்சி மாநாடு இந்தியா 2023, கடந்த 25ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய நிலையில், இன்று (27.08.2023) நிறைவடைகிறது. நண்பகல் 12 மணிக்கு, மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதில், 55 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்