புரட்டி போட்ட கனமழை - நிரம்பி வழியும் அணைகள் - தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள் - கழுகு பார்வை காட்சி

x

குஜராத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நர்மதா, பருச், வதோதரா, தாஹோத் மற்றும் பஞ்சமஹால் மாவட்டங்களில் இருந்து 9 ஆயிரத்து 613 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மஹிசாகர், சபர்கந்தா, ஆரவல்லி மற்றும் கெடா மாவட்டங்களிலும் மிகக் கனமழை பெய்த நிலையில், மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்தது. சர்தார் சரோவர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கடனா அணைப் பகுதிகளிலும் பெய்த கனமழையால் , நர்மதா மற்றும் மகிசாகர் ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது... வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை-குஜராத் இடையே பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்