ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திக்க வரும் குடியரசு தலைவர்

x

ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திக்க வரும் குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று மாலை முதுமலைக்கு வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மைசூரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.30 மணிக்கு மசினகுடி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழமையான யானைகள் முகாமிற்கு செல்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவண படத்தில் நடித்த ரகு மற்றும் பொம்மி யானைகளையும், பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் சந்திக்கும் அவர், தெப்பக்காடு மற்றும் டாப்சிலிப் யானை முகாம்களால் பணியாற்றும் யானை பாகன்களை சந்தித்து விட்டு, 5 மணிக்கு அங்கிருந்து மசினகுடிக்கு வருகிறார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூர் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மசினகுடி மற்றும் முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் ஆயிரத்து 100 போலிசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10 நக்சல் தடுப்பு பிரிவினர் வன பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லட்டி மலை பாதை மூடப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் குடியரசு செல்லும் சாலைகளில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்