கலைஞர்கள் வேடத்தில் வீதி உலா.. மேளதாளத்துடன் செம்ம VIBE..வெகுவிமர்சையாக தொடங்கிய ஓணம் பண்டிகை

x

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக, அத்தசமய ஊர்வலத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.

கேரளாவில் திருவோண பண்டிகை எல்லா வருடமும் தமிழில் ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும். அதற்கு முன்பாக 10 நாட்கள் அஸ்த நட்சத்திரம் வரும் தினத்தன்று, அத்த சமயம் என்ற விமர்சையான ஊர்வலம் திருப்பனித்துரா நகர வீதிகளில் வலம் வரும். அத்தசமய ஊர்வலத்தை கோட்டயத்தில் உள்ள திருக்காக்கரா மகாதேவர் கோயிலில் முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். அமைச்சர் பி.ராஜீவ் கொடியேற்றினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் மம்முட்டி கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கின. இதில் கேரள கலாச்சார முறைப்படி அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களில் கலைஞர்கள் வேடம் அணிந்து வீதி உலா சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்