இப்படி ஒரு ஆஃபரா? இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்போசிஸ்... திகைத்துப் போன ஊழியர்கள்

x

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், ஓய்வு நேரத்தில் இதர நிறுவனங்களுக்கு கிக் (gig) பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது.

வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணியாற்றும் ஐ.டி துறை ஊழியர்கள், கள்ளத்தனமாக இதர நிறுவனங்களுக்கும் பணியாற்றுவது பிரச்சனைக்குள்ளானது.

இதை தடுக்க, ஐ.டி நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நிர்வாகத்தின் முன் அனுமதியுடன், இதர நிறுவனங்களுக்கு, பகுதி நேர அடிப்படையில் பணியாற்ற, இன்போசிஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அனுமதியளித்துள்ளது.

இன்போஸிஸ் அலுவலக நேரங்கள் தவிர்த்து, ஓய்வு நேரத்தில் இத்தகைய பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது. இன்போசிஸ் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடன் நேரடி போட்டியில் இல்லாத இதர நிறுவனங்களிடம், பகுதி நேரமாக பணி புரியலாம் என்று கூறியுள்ளது.

இன்போசிஸில் இருந்து ராஜினாமா செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும்,

ஊழியர்களின் அதிருப்தியை போக்கவும், அவர்களின் வருவாயை அதிகரிக்கவும்

இன்போசிஸ் இதை முன்னெடுத்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்