"இனிமே சில்லறை பிரச்சனை இல்லை"கேரளா அரசு பேருந்துகளில் யூபிஐ..வெளியான புது அப்டேட் | Kerala

x

கேரளாவில், அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், டிஜிட்டல் கட்டணத்தை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பயணிகள் பயண டிக்கெட்டுக்கான பணத்தை, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தியும், கூகுள் பே, கியூ ஆர் குறியீடு மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த "சலோ ஆப்" என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பல சாலை போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே சலோ ஆப் மூலம் டிக்கெட் சேவைகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்