இனி ஸ்மார்ட்போன்களில் TV...Net இல்லாமல் ஓடும் சேனல்கள் - மத்திய அரசின் D2M பிளான்

x
  • இந்தியாவில் தற்போது 60 கோடி ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். டேட்டா விலை மிகக் குறைவாக, ஒரு ஜி.பியின் சராசரி விலை 14 ரூபாயாக உள்ளது.
  • நான்கு நிறுவனங்கள் மட்டும் கொண்ட இந்திய டெலிகாம் துறையில், கடும் போட்டி காரணமாக, லாப விகிதம்
  • மிகக் குறைவாக உள்ளது. ஓடோபோன் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.
  • இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பு திட்டத்தை அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஸ்மார்ட் போன்களில் FM ரேடியோ ஒலிபரப்பு செய்யப்படுவதைப் போல, தொலைகாட்சி ஒளிபரப்புகளும் நேரடியாக செய்ய வகை செய்யும் தொழில்நுட்பம் Direct to Mobile என்று அழைக்கபப்படுகிறது.
  • இதற்கு செல்போன் இணைப்பு மற்றும் இணைய வசதி தேவைப்படாது. ஆனால் செல்போன்களில் இதற்கான கம்ப்யூட்டர் சிப் ஒன்று கூடுதலாக பொருத்தப்பட வேண்டும். செல்போன் டவர்கள் அல்லது இதர டவர்களில் இதற்கான ஒளிபரப்பு கருவிகளை பொருத்த வேண்டும்.
  • ஆனால் டெலிகாம் நிறுவனங்கள், சிப் தயாரிப்பாளர்கள், செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், செல்போன் டவர் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • இதை அனுமதித்தால், பிறகு டேட்டா அடிப்படையிலான வருவாய் அளவு வெகுவாக சரியும் என்று டெலிகாம் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.
  • இதற்கான கம்யூட்டர் சிப்பை பொருத்த, செல்போன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவாகும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
  • மேலும் இதற்கு தேவையான சிப்கள் தயாரிப்பு உலக அளவில் மிகக் குறைவாக உள்ளதால், போதுமான
  • எண்ணிக்கையில் அவற்றை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறுகின்றன.
  • அனைத்து தரப்பினருடனும் இது பற்றி கலந்தாலோசனை செய்யாமல், இத்திட்டம் பற்றி மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றன.

Next Story

மேலும் செய்திகள்