பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார்... பிரதமர் மோடி போட்ட ட்வீட்

x

பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கு வாழ்த்துகள். பீகாரில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, முழு அர்ப்பணிப்புடன் எனது மாநில மக்களுக்கு சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்