கேரளாவை அலற விடும் நிபா வைரஸ்...அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..Nipah Virus | Kerala

x

கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அண்டை மாவட்டங்களான கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸை எதிர்கொள்ள தேவையான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கோழிக்கோட்டில் நிபா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்