அடியோடு சரிந்த வீடுகள்... மாய்ந்த 74 உயிர்கள் - மனித தடமே இல்லாமல் அளித்த இயற்கை

x

தொடர் கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதையும் இயற்கை சீற்றத்தால் zபாதிக்கப்பட்ட பகுதியாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிம்லா, கங்கிரா, மண்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடியோடு சரிந்து விழுந்தன. இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டிருப்பதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறியுள்ளார். இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் மாநிலம் முழுவதையும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என மாநில அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்