நாய்க்கு மும்பை பெண் அளித்த காஸ்ட்லி கிஃப்ட்

x

மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண் டைகர் என்ற நாயை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஒரு நகைக் கடைக்கு தன்னுடன் நாயை அழைத்துச் சென்றார். அப்போது அங்கே இருந்த விதவிதமான டிசைன்களை தேடி கடைசியில் ஒரு தங்க செயினை செலக்ட் செய்திருக்கிறார். ஏதோ அவருக்கு தான் வாங்குகிறார் என நினைத்தால் திடீரென நாயின் கழுத்தில் போட்டு அழகு பார்த்திருக்கிறார் அவர்.. நாய்க்கு அவர் ஆசையாக அணிவித்த செயினின் மதிப்பு இரண்டரை லட்சம்..இதனை கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துள்ளனர். இந்த வீடீயோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்