தாய் போட்ட கட்டளை... நிலவில் தாவிக் குதித்த "விக்ரம் லேண்டர்" - இஸ்ரோ செய்த மேஜிக்

x

சந்திரயான் 3ன் வெற்றிப் பயணத்தில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து சென்றது பிரக்யான் ரோவர்... விக்ரம் லேண்டரை நிலவில் தாவ வைக்க முடியுமா? என முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடி 40 சென்டி மீட்டர் தன்னைத் தானே உயர்த்தி, 30 முதல் 40 சென்டிமீட்டர் தூரத்தில் தாவிச் சென்றது... இந்த சோதனையின் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எல்லா அமைப்புகளும் இயல்பாக செயல்பட்டு வரும் நிலையில், லாண்டரில் பொருத்தப்பட்ட CHASTE , ILSA உள்ளிட்ட கருவிகள் வெற்றிகரமாக மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்