மேக‌தாது அணை ஒன்றே தீர்வு-டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

x

பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அறுபது சதவீதம் மழை குறைந்து இருப்பதன் காரணமாக அணைகளில் புதிய நீர் இல்லை என்றார். கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமல் 5 ஆயிரம் கன‌அடி நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டது விவசாயிகளை பாதித்துள்ளதாகவும் தெரிவித்தார். விகிதாச்சார அடிப்படையை பார்க்கும் போது மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் இருந்து, தமிழகம் 93 டிஎம்சி நீரை கூடுதலாக விவசாயத்திற்கு பயன்படுத்தி இருப்பதாக டி.கே.சிவக்குமார் கூறினார். அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து விவசாயிகள் பயிர்களை அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்ற அவர், ஆனால் அது தமிழக அணைகள் என்பதால் அவர்களின் உரிமையில் எதையும் கூற விரும்பவில்லை என்றார். மேகதாது அணை திட்டம் ஒன்றே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை ஆணையத்தில் அழுத்தமாக பதிவு செய்ய உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்