நிலவில் 7.35மணிக்கு மாஸ் சம்பவம்..உலகத்திற்கு சொல்லி அடித்த இஸ்ரோ..இந்தியாவுக்கு கிடைத்த முழு வெற்றி

x

சந்திரயான் - 3 திட்டத்தில் இந்தியாவே எதிர்பார்த்த அற்புதமான கிளிக்கை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

23 ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இந்த காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைக்கொள்ள செய்தது. தென்துருவத்தை அலசி ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியதிலிருந்து அபூர்வமான காட்சிகளை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது.

இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது... உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது.

எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது.

இதுபோக நிலவில் வெப்பநிலை என்ன...? நிலவில் ஆக்சிஜன், சல்ஃபர் தனிமங்கள் உள்ளன என அறிவியல் தகவல்களையும் வழங்கி இஸ்ரோ வியப்பளித்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவே எதிர்பார்த்த கிளிக் ஒன்றை அனுப்பியிருக்கிறது பிரக்யான் ரோவர்...

நிலவில் உலாவும் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை

நேர் எதிராக புகைப்படம் எடுத்து அனுப்பும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

அந்த தருணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடம் நிறைந்திருக்க, தருணம் சிக்கியதும் காலை 7:35 மணிக்கு விக்ரம் லேண்டரை கிளிக் செய்து அனுப்பியிருக்கிறது பிரக்யான் ரோவர்...

நேவிகேஷன் கேமராவில் லேண்டரை புகைப்படம் எடுத்து பிரக்யான் ரோவர் எடுத்த புகைப்படம், இந்தியர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்