வறட்சி நீங்கி விவசாயம் செழிக்க - சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தரிசி பூஜையை முன்னிட்டு, நெற்கதிர்களை வைத்து சன்னிதானத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்க இந்தப் பூஜை நடத்தப்படுகிறது. கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு, தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நிறைபுத்தரிசி பூஜைக்கான நெற்கதிர் கட்டுகள், அச்சன்கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பன் சன்னிதானத்தில் ஒப்படைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், நெற்கதிர்களை வைத்து நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டன. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. ஆவணி மாத பூஜைக்காக வரும் 16-ம் தேதி, கோயில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்