மணிப்பூர் விவகாரம் - "இதுவரை பிரதமர் செல்லாதது ஏன்?" - காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் | Lok Sabha

x

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் இதுவரை ஏன் செல்லவில்லை? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை, மக்களவையில் அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் தொடங்கிவைத்து பேசினார். மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பிரதமரின் மவுன விரதத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுவரை மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் செல்லாதது ஏன்? என்றும், கலவரத்தால் மணிப்பூர் பாதிக்கப்பட்டு 80 நாட்களுக்குப் பின்னர் வெறும் 30 வினாடிகளுக்கு அதுகுறித்து பிரதமர் பேசியதாகவும் குறிப்பிட்டார். இதுவரை மணிப்பூர் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படாதது ஏன்? என்றும் கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பினார். இரட்டை எஞ்சின் அரசு தோல்வியடைந்துவிட்டதை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், இதன் காரணமாகவே 150 பேர் கொல்லப்பட்டதுடன், 5 ஆயிரம் வீடுகள் எரிக்கப்பட்டு, 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதாகவும் கவுரவ் கோகோய் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்