"ராஜ் பவனை சுற்றி பார்க்கலாம்" - ஆளுநர் அதிரடி அறிவிப்பு

x

ஆளுநர் மாளிகையின் கதவுகள் பொதுமக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள ராஜ் பவனில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில், 600 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர். விழாவில் தியாகிகளுக்கு சால்வை அணிவித்தம், கேடயம் வழங்கியும் ஆளுநர் கவுரவித்தார். பின்னர் பேசிய அவர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால், அறியப்படாத சுதந்திர போராட்ட வீர‌ர்கள் எனும் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 91பேர் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், இனி ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று, விழா எடுக்கப்படும் என்றார். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் ராஜ்பவனை பார்வையிடலாம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்கள் மாளிகையாக இருக்க வேண்டும் என்றும், பிரிட்டிஷ் ஆட்சி போன்று ஆளுநர் மாளிகைக்கும், மக்களுக்கும் இடையே இடைவெளி இருக்க‌க்கூடாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்